முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வில்லூர் கலவரம் - இரு பிரிவினரும் சமாதானமாக செல்ல சம்மதம்

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,மே.12 - திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வில்லூர் கலவரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல சம்மதம் தெரிவித்ததால் வில்லூரில் சகஜ நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த மே 1 ம் தேதி வில்லூரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் போலீசாருக்கு பயந்த மக்கள் ஊரை காலி செய்தனர். இந்நிலையில் வில்லூர் கலவர பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டி.ஆர்.ஓ. முருகேஷ், ஆர்.டி.ஓ. புகழேந்தி, தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் முடிவில் இரு தரப்பினரும் சுமூகமாக செல்வது, பிரச்சினைகளை பேசி தீர்ப்பது, ஒற்றுமையுடன் வாழ்வது, வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதே போல் வழக்கில் தொடர்புடையவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் கிராமத்திற்கு வழக்கம் போல் திரும்பி வரலாம். எனவே தேவையற்ற கைது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வில்லூரில் விரைவில் சகஜ நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்