முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளையன் கூட்டாளியுடன் படுகொலை: 2 பேர் கைது

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

ராயபுரம், செப். 20 - தண்டையார்பேட்டை வழிப்பறிக் கொள்ளையன் கொலை வழக்கில் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுவாஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவன் சுதா என்ற பல்சர் சுதா (35). வழிப்பறி கொள்ளையன். இவன் ஆவடி, அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கை வரிசை காட்டி வந்தான். இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவனது கூட்டாளி தங்கராஜ். திருவொற்றியூரை சேர்ந்த இவனும், பல்சர் சுதாவும் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றி திரிந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஆர்.கே.நகர் கருணாநிதி நகருக்கு பல்சர் சுதா, தனது கூட்டாளிகளான தங்கராஜ் மற்றும் 3 பேருடன் சென்றான்.

அங்கு சமோசா கடை ஒன்றின் முன்னால் அதன் உரிமையாளர் நாகராஜனும், கடையில் வேலை செய்யும் மணிகண்டன் என்பவரும் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பல்சர் சுதாவும், அவனது கூட்டாளிகளும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜனும், மணிகண்டனும் அவர்களுடன் தகராறில் ்டுபட்டனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சமோசா வியாபாரிகள் இருவரும், வழிப்பறி கொள்ளையன் சுதா, மற்றும் கூட்டாளிகளை விரட்டி விரட்டி தாக்கினர்.

சமோசா போடுவதற்கு பயன்படும் பெரிய இரும்பு கம்பியால் தாக்கியதில் பல்சர் சுதா பலத்த காயம் அடைந்தான். கடை முன்பே சுருண்டு விழுந்து அவன் பலியானான். இந்த தாக்குதலில் தங்கராஜுக்கும் காயங்கள் ஏற்பட்டன. அங்கிருந்து தப்பிச்சென்ற அவன் அருகில் உள்ள 2-வது தெருவில் கீழே சாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆர்.கே.நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை மீட்டு பேரின் உடலையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். கொலை செய்யப்பட்ட பல்சர் சுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமோசா கடை உரிமை யாளரான நாகராஜ், ஊழியர் மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். இந்நிலையில் நேற்று 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

வியாபாரிகளிடம் குடிபோதையில் தகராறு செய்ததாலேயே பல்சர் சுதாவும், தங்கராஜும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறினாலும் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் பல்சர் சுதாவின் நண்பரான 'குள்ள ஜெயராஜ்' அதே பகுதியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான திருட்டு சரவணன் என்ற ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான். எனவே அவனது தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்