முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும்: சவுந்திரராஜன்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

வாலாஜாபேட்டை, செப். 21 - மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க நடிகர் ரஜினி ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என்றார் அக்கட்சியின் தேசிய செயலர் தமிழிசை சவுந்திரராஜன். 

கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் காவேரி பாக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

திருச்சியில் இம்மாதம் 26 ம் தேதி நடைபெறவுள்ள இளந்தாமரை மாநாட்டில் வேலூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பிரதமர் வேட்பாளரான மோடி தேர்தலில் வெற்றி பெற பல்வேறு உத்திகளை செய்து வருகிறார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். 

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது. நதிகளை இணைக்க வேண்டும் என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நடிகர் ரஜினி முதலில் ஆதரவு அளித்தார். எனவே மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கவும், மோடி பிரதமராகவும் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். 

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பாபாஸ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் வெங்கட்ராமன், பிரகாஷ், தணிகாசலம், ராஜேந்திரன், குணசேகரன், அரிசி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony