முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது இந்து மக்கள் கட்சி குற்றசாட்டு

வியாழக்கிழமை, 12 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மே.12 - புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் தரீன் மீது பல்வேறு குற்றசாட்டுகளை இந்து மக்கள் கட்சி சார்பாக மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாதுரை குற்றம் சாட்டியுள்ளார். புதுவை பல்கலைகழகத்தில் 3500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களில் புதுவை பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு 25 ெதமிழ் மாணவர்களுக்கு ஓதுக்கப்பட வேண்டும். ஆனால் தகுதி குறைவு என காரணம் காட்டி தமிழ் மாணவர்களுக்கு சீட் தராமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். மேலும் பல்கலைகழகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை தமிழர் என்ற காரணத்தினால் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பணி நிரந்தரம் செய்ய பல லட்சம் ரூபாய் கேட்கப்படுகின்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் தரீன் ஓரு சில பெண் ஊழியர்களுக்கு மட்டும் விமான பயணம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, போன்ற சலுகைகளை வழங்கி வருகிறார். 

இலங்கையில் லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த போர்குற்றவாளி என ஐ.நா. சபை மூலம் அறிவிக்கப்பட்ட ராஜபக்சேவின் விசுவாசியாகவும், வருங்கால இலங்கை தூதராக பதவி உயர்வு பெற்று விடலாம் என்ற காரணத்தினால் புதுவை பல்கலைகழகத்தில் உள்ள தெற்காசிய கல்வி மையத்தில் லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டின் கொடி பதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது போலீஸ் நடவடிக்கை எடுத்து மாணவர்களை கைது செய்ய துணை நின்ற துணைவேந்தர் தரீன் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக மாநில பொதுச்செயலாளர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago