முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண உதவித்திட்டம்: முன்னதாக விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.25 - தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை, சமுதாயத்தின் பல்வேறு  தரப்பினருக்கும் நடைமுறைப்படுத்தி வருகிறார். தன்னால் அறிவிக்கப்படும் திட்டங்கள், வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், அவைகள் ஏழைகளைச் சென்று சேருகிறதா என கண்காணித்து, ஒவ்வொரு திட்டத்தையும் முனப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

அவர் அமல்படுத்திய முத்தான திட்டங்களில் ஏழைப்பெற்றோர்களின் பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள் ஆகியோருக்கு உதவிடும் வகையில் 5 விதமான திருமண நிதியுதவித்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஏழைப்பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித்திட்டமும் ஒன்று, பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சிப்பெற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கமும், திருமாங்கலயத்திற்கு 4 கிராம் தங்க நாணயம் இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வருகிறது. பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு படித்த இளம் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கமும், திருமாங்கலயம் செய்வதற்கு 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏழை மக்களுக்கான இந்த முன்னோடி திட்டம் 17.05.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 8,240 ஏழைப்பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயணடைந்துள்ளனவ். இத்திட்டத்தின் படி சாதி, மத பேதமின்று அனைத்து பிரிவு பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி திருமண உதவியை நாடும் அனைத்து பெண்களும், அவர்களது திருமண தேதிக்கு குறைந்தபட்சம் 40 தினங்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டங்களில் டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனைய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு குறைவாக உள்ளதால், அதிக அளவில் ஏழை எளிய மக்களால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற இயலவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அரசு திருமண நிதியுதவி திட்டங்களில் கீழ் நிதி உதவி பெற தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்கள்.

விதவைகள் மறுமணம் மற்றும் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் இளம் பெண்கள் திருமணத்தேதியில் இருந்து முறையே ஆறு மாதங்களுக்கு உள்ளாகவும் மற்றும் இரண்டு வருடங்களுக்கு.

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்று பல்வேறு திட்டங்களின் படி உழைக்கும் உழைப்பாளர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும், குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் இல்லத்தரசிகளுக்கும், பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

அனைத்து திட்டங்களிலும் ஒரு சிறந்த திட்டமாக இந்த திருமண உதவித்திட்டம் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழக அரசின் சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டும் இந்த திட்டம் வருங்காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பது மிகையல்ல.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்