முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசா ஆராய்ச்சி படிப்பிற்காக செல்லும் மாணவ - மாணவிகள்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 25 - நாசா விண்வெளி ஆராய்ச்சி படிப்பிற்காக   7   ??ன்னை பள்ளி மாணவ-மாணவிகள் அமெரிக்கா செல்கின்றனர். மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளிலேயே அதற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்களே அறிவுத் திறனை வளர்க்கும் வகையிலும் சிந்திக்கும் முறையிலும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மாணவர்களிள் அறிவுத்திறனை ஊக்குவிக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் அறிவியல் சார்ந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை ஆய்வு செய்து அது தொடர்பான அறிவியல் தேர்வில் பங்கேற்க சென்னையில் உள்ள மகரிஷி வித்யாலயா பள்ளிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அந்த தேர்வில் அப்பள்ளியில் இருந்து பங்கேற்க 7 மாணவ-மாணவிகள் அமெரிக்கா செல்கின்றனர்.

இதற்காக இன்று (25-ந்தேதி) சென்னையில் இருந்து மாணவர்கள் புறப்படுகிறார்கள். நாசாவிற்கு சென்று 3 நாட்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். பின்னர் 4-வது நாள் அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியில் புளியந்தோப்பை சேர்ந்த விஜயகுமார்-அனுசுயா தம்பதியின் மகள் பிரகீர்த்தனா பங்கேற்கிறார். 10-ம் வகுப்பு படித்து வரும் இவர் தந்தை கூறும் போது என் மகள் விண்வெளி ஆராய்ச்சியில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், எனது மகள் உள்ளிட்ட 7 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆராயவும், தேர்வு எழுதவும் இருக்கிறார்கள். இதற்கான பயண செலவை பெற்றோரே ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

நாளை அமெரிக்கா செல்லும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் விமான நிலையம் சென்று வழியனுப்புகிறார்கள். அக்டோபர் 7-ந்தேதி சென்னை திரும்புகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்