முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்கானுாரணி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 4பேர் பலி

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்.செப்.25 - செக்கானுாரணி அருகேயுள்ள தனியார் பட்டாசுஆலையில் நேற்று மாலை நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில் மூன்று பெண்கள் உட்பட 4பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும் இந்த விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட எஸ்.பி.,பாலகிருஷ்ணன்,ம.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி ஆறதல் கூறினர்.

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட செக்கானுாரணி அருகேயுள்ள சிக்கம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான வி.பி.எம்.ஆனந்தன் எனும் பட்டாசு தயாரிக்கும் ஆலை முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.அங்கு தீபாவளி பண்டிகைக்கென வாங்கிய ஆர்டர்களுக்காக இரவும் பகலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்துள்ளது.இந்நிலையில் நேற்று மாலை சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் இருந்துள்ளனர்.அப்போது சுமார் 5 மணியளவில் ஆலையில் பட்டாசுகளுக்கு மருந்து நிரப்பிடும் பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.அப்போது வெளியில் காயவைக்கப் பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே சமயத்தில் வெடித்துச் சிதறியுள்ளது.இந்த பயங்கர வெடிவிபத்தில் பலர் வெளியே ஓடி தப்பிச் சென்றபோதிலும் மருந்து நிரப்பும் பகுதியில் பணியிலிருந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வெடிகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த திருமங்கலம் மற்றும் மதுரை பகுதியிலிருந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.எனினும் இந்த கோர வெடிவிபத்தில் கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு(24),சிக்கம்பட்டியைச் சேர்ந்த பஞ்சு(25), விஜயா(34) மற்றும் பிரபு(25)ஆகிய 4பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும் படுகாயமடைந்த 4 பேர் அரசு ஆரம்பசுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அரசு 108 ஆம்புலன்சுகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன்,மாவட்ட எஸ்.பி.,பாலகிருஷ்ணன்,மதுரை புறநகர் மாவட்டகழகச் செயலாளர் ம.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,உசிலம்பட்டி கோட்டாட்சியர் துரைப்பாண்டியன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன்,தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பட்டாசு ஆலையை நேரில் பார்வையிட்டு ஆறதல் கூறினார்கள்..அப்போது கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: இந்த வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4பேர் பலியர்கியுள்ளனர்.இந்த பட்டாசு ஆலை முறையான அனுமதி பெற்றுதான் இயங்கி வந்துள்ளது.விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து செக்கானுாரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்திவருகின்றனர்.பட்டாசு வெடிவிபத்தில் மூன்று பெண்கள் உட்பட 4பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago