முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய ஜூனியர் டென்னிஸ் - சென்னையில் 16ம் தேதி துவக்கம்

வியாழக்கிழமை, 12 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.12 - சென்னையில் முதல் முறையாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடைபெறுகின்றன. இப்போட்டி வருகிற 16ம் தேதி துவங்குகிறது.சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள உலகத்தரம் வாய்ந்த எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வரும் 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை ஆசிய ஜூனியர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. 

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் நடைபெற்று வரும் இப்போட்டிகள் ஆசிய நாடுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு சர்வதேச புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 

இந்த ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ், சைனீஸ் தைபே, ஜப்பான், சீனா, இந்தோனேசியா, வியட்நாம், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இளம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இரு பாலருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 128 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியின் துவக்க விழா வருகிற 16-ம் தேதி காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இந்தியா சார்பில் சிறுவர்கள் பிரிவில் அர்ஜூன் காடே தக்கார், கவுடா, சவுரப் சிங், ரோனித் சிங் ஆகியோரும், சிறுமியர் பிரிவில் ரிஷிகா, பிரார்த்தனா, நடாஷா, ரத்னிகா, கனிகா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இத்தகவலை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர்  அழகப்பன், துணைத்தலைவர் கார்த்தி பி.சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago