முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு தனித்தனி நவீன அறைகள்

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

ஸ்டான்லி மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு ஏ.சி. வசதியுடன் தனித்தனி நவீன அறைகள்

சென்னை, செப். 27 - அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்களுக்கு அறுவை சிசிச்சை அளிக்கப்படுகிறது. ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகள் வார்டில் தங்கி உயர் தரமான சிகிச்சை பெற அறுவை சிகிச்சை பிரிவு நவீனப்படுத்தப்பட்டது.

ரூ.32 லட்சம் செலவில் குளு குளு வசதியுடன் இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு பல்வேறு வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. அதனை சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திறந்து வைத்தார்.

இதே போல நுரையீரலில் கட்டி, சளி, தொண்டை, குரல்வளை போன்ற உறுப்பு களில் ஏற்படும் நோய்களை கண்டறிய நவீன கருவி ரூ.18 லட்சத்தில் வாங்கப்பட்டது. அதனையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனையில் கூடுதல் தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இது குறித்து டீன் கீதாலட்சுமி கூறியதாவது:-

அறுவை சிகிச்சை துறை மூலம் அறுவை சிகிச்சை பிரிவு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 35 தனி அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் கழிவறை மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. நோயாளியுடன் உதவியாளர் ஒருவர் கூட தங்கலாம். முற்றிலும் ாகுளு குளுா வசதி செய்யப்பட்டுள்ளது.

முதல்- அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 2 நோயாளிகள் வீதம் தங்கி சிகிச்சை பெற 4 அறைகளும் கட்டப்பட்டுள்ளன. நவீன தீவிர சிகிச்சை அறை இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு ஆஸ்பத்திரியில் எல்லா வசதிகளும், தரமான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago