முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோ மீட்டர் தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய குழு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 27 - சென்னையில் 71, 470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டண உயர்வை கடந்த மாதம் 25-ந்தேதி அரசு அமல்படுத்தியது.

சென்னையில் ஓடும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ரூ.80 கோடி செலவில் அரசு ஜி.பி.எஸ். ஆட்டோ மீட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

புதிதாக தயாரித்து வழங்கப்பட இருக்கும் ஜி.பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் மீட்டரில், இடத்தை காட்டும் கருவியுடன், பயணிகளுக்கு கட்டண ரசீதும் கிடைக்கும். ஆபத்து நேரத்தில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள மீட்டரில் ஒரு பொத்தானும் (பேனிக் பட்டன்) வைக்கப்படுகிறது.

ரூ.80 கோடி செலவில் ஜி.பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் மீட்டர்களை தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை இப்போது நியமித்துள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி உத்தரவிடப்பட்டது. அந்த ஆட்டோக்களில் உதவி மற்றும் புகார் தெரிவிப்பதற்கான ஹெல்ப் லைன், கண்காணிப்பு அம்சங்கள், கட்டண பில் அச்சு உபகரணம் போன்றவை கொண்ட ஜி.பி.எஸ். கருவியை பொருத்துவதற்கான நிபுணர் குழு நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த கருவியைப் பொருத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில் சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்காக இந்த கருவியை வாங்குவதற்கான டெண்டர் விடுவதற்கு முன்பு, அந்த கருவிகளுக்கான தர அளவை குறிப்பதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து முதன்மைச் செயலாளர் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்தது.

 அதன்படி, 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை அரசு நியமிக்கிறது. இந்த குழுவில் போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிதித்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள். அதோடு அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. கல்வி நிறுவன பேராசிரியர்களும் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago