முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட்டில் 7 நீதிபதிகள் பதவி ஏற்பு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.27 - சதீஷ்கர் மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அக்னி ஹோத்ரி கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த மதிவாணன், அர்த்தனசாமி, ஆறுமுகசாமி, வாசுகி, கந்தசாமி, ஹரிசந்திரபாபு, தேவதாஸ், கருப்பையா ஆகிய 6 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி சமீபத்தில் பிறப்பித்தார். இதையடுத்து 7 பேரும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நேற்று  பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

பதவி ஏற்பு விழா சென்னை ஐகோர்ட்டு நூலக கட்டிட வளாகத்தில் நேற்று  காலை நடந்தது. இதில் சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து மாற்றலாகி வந்துள்ள சதீஷ்குமார் அக்னிஹோத்ரி மற்றும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 6 பேர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

7 பேருக்கும், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் அட்வகேட் ஜெனரல் சோமை யாஜி பதவி ஏற்ற நீதிபதிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது மத்திய பிரதேசத்தில் பிறந்து சதீஷ்கர் ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி சென்னை வந்துள்ள நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி பற்றிய விவரங்களை கூறினார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி அக்னிஹோத்ரி, சென்னை ஐகோர்ட்டின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். நடுநிலையுடன் பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்தார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ள நீதிபதி சதாசிவம் போன்றோர் பணி புரிந்த சென்னை ஐகோர்ட்டில் பணி புரிவது பெருமை என்றும் அவர் குறிப்பிட்டார். நிரந்தர நீதிபதியாக பதவி ஏற்றுள்ள நீதிபதி மதிவாணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்