முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்து

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.27 - பிரதமர் மன்மோகன் சிங் 81-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகனுக்கு நேற்று 81-வது பிறந்த நாள். பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். 

இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது:- 

தங்களின் இனிய பிறந்த நாளில் தங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். 

நீங்கள் நீடூழி வாழ இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கவர்னர் வாழ்த்து:-

பிரதமருக்கு ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உங்கள் பிறந்தநாளில் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன். சிறந்த நிர்வாக திறமையும், பிரச்சனைகளை அணுகும் திறமையும் கொண்ட தங்களின் தலைமையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். தாங்கள் நீண்ட நாட்கள் மகிழ்ச்சி மற்றும் நல்லாரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கவர்னர் ரோசய்யா அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்