முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிகளின் ஏஜெண்டுகளை அனுமதிக்கோரி ஜெயலலிதா கடிதம்

புதன்கிழமை, 11 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.12 - ஓட்டு எண்ணும் இடத்தில் டேட்டா என்டிரியில் தவறும் நடக்காமல் தடுக்க, கம்யூட்டர் பதிவை கண்காணிக்க அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

2009-ம் ஆண்டு தமிழகத்தில் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் ஏற்பட்ட சில முறைகேடுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு நான் கொண்டு வர விரும்புகிறேன். அந்த தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையின் போது டேட்டா என்ட்ரி செய்வதில் முறை கேடு நடந்து உள்ளது. 

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற  தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் வாங்கிய ஓட்டுக்களை காங்கிரஸ் வேட்பாளர் பா.சிதம்பரம் வாங்கியதாக டேட்டா என்ட்ரியில் சேர்த்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:- 

31, சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்காணும்  எண்களை கொண்ட வாக்கு பதிவு மையங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன்  வாங்கிய ஓட்டுகளும், பா.சிதம்பரம்  வாங்கிய ஓட்டுகளும் வருமாறு:

வாக்கு எண்ணிக்கை மைய எண், அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பனுக்கு கிடைத்த வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பரத்திற்கு கிடைத்த வாக்குகள்:-

 121-ல் 333 ஓட்டுகள், 157,

 131-ல் 335 ஓட்டுகள்,  157,

 132-ல் 195 ஓட்டுகள்,  203,

 134-ல் 290 ஓட்டுகள், 105,

 142-ல் 332 ஓட்டுகள், 226,

 158-ல் 360 ஓட்டுகள், 238,

 164-ல் 375 ஓட்டுகள், 99,

 165-ல் 272 ஓட்டுகள், 37,

 166-ல் 370 ஓட்டுகள், 176,

 169-ல் 342 ஓட்டுகள், 86,

அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பன் வாங்கி ஓட்டுகளை, காங்கிரஸ் வேட்பாளர் பா.சிதம்பரத்திற்கும், பா.சிதம்பரம் வாங்கிய ஓட்டுகளை கண்ணப்பனுக்கும் டேட்டா என்ட்ரி செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

வாக்கு பதிவு மைய எண், அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பனுக்கு விழுந்ததாக பதிவு செய்யப்பட்ட ஓட்டுகள், காங்கிரஸ் வேட்பாளர் பா.சிதம்பரத்திற்கு விழுந்ததாக பதிவு செய்யப்பட்ட ஓட்டுகள் விபரம் வருமாறு:-

120-ல் 84 ​- 196,

121-ல் 157 - 333,

131-ல் 203 - 335,

132-ல் 105 - 195,

134-ல் 206 - 290,

142-ல் 226 - 332,

158-ல் 238 - 360,

164-ல் 99 - 375,

165-ல் 37 - 272,

166-ல் 176 - 370,

169-ல் 86 - 342,

மேற்காணும் விவரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்தில் டைப் செய்யப்பட்ட ஆவணமாக வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. டேட்டா என்ட்ரி ஆப்ரோட்டர் மூலம் நடைபெற்ற தில்லுமுல்லுகள் குறித்து தி.மு.க. ஆட்சியில் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிவகங்கை தொகுயில் நடைபெற்ற இந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

எனவே  இந்த முறை ஓட்டு எண்ணிக்கையின் போது, எந்தவித தவறுகளும் நடைபெற்றாமல் தடுக்க, டேட்டா என்ட்ரி செய்வதை (பார்ம் 20​ல் பதிவு செய்தல்) ஏஜெண்டுகள் கண்காணிக்க தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும். கம்ப்யூட்டர் தகவல் பதிவு ஆபரேட்டர்களை பணியில் அமர்த்தும் போது அவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு அவர்களது நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டு பணியில் அமர்த்த வேண்டும். கம்ப்யூட்டர் தகவல் பதிவு ஆபரேட்டர்களால் பார்ம் 20​ல் பதிவு செய்யப்படுவதை ஏஜெண்டுகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள், மற்றும் பார்வையாளர்கள் அதிகாரிகள் பதிவு செய்த வாக்குகளும், கம்ப்யூட்டர் தகவல் பதிவும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். சட்டசபை தொகுதி முடிவுகளை இவ்வாறு சரிபார்த்த பிறகே அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அந்த கடித்ததில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்