முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வக்கீல்கள் இடமாற்றம்: அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.28 - தமிழகத்தில் அரசு வக்கீல்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவாரூர் கூடுதல் அரசு வக்கீல் பி.மதியழகன், ஈரோடு குற்றவியல்துறை உதவி இயக்குனராக மாற்றப்படுகிறார். ஈரோடு கூடுதல் அரசு வக்கீல் ஏ.கோவிந்தராஜு, திருவாரூர் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக மாற்றப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் கூடுதல் அரசு வக்கீல் ஆர்.ஜெயசிம்மராஜா, திண்டுக்கல் குற்றத்துறை உதவி இயக்குனராக மாற்றப்படுகிறார். கோவை கூடுதல் அரசு வக்கீல் பி.சக்கரைச்சாமி, திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக நியமிக்கப்படுகிறார்.

ராமநாதபுரம் கூடுதல் அரசு வக்கீல் சி.சுப்புராஜா, விருதுநகர் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார்.. நாகர்கோவில் குற்றத்துறை உதவி இயக்குனர் ஆர்.மணிமுருகேசன், மதுரை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக மாற்றப்படுகிறார்.

விழுப்புரம் கூடுதல் அரசு வக்கீல் எம்.சன்னியாசி, விழுப்புரம் குற்றத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்படுகிறார். திருவண்ணாமலை கூடுதல் அரசு வக்கீல் ஒய்.அம்ஜத் அலி, விழுப்புரம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக நியமிக்கப்படுகிறார்.

தர்மபுரி கூடுதல் அரசு வக்கீல் ஆர்.சந்திரபிரகாஷ் ராவ், தர்மபுரி குற்றத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். உதகமண்டலம் குற்றத்துறை உதவி இயக்குனர் பி.கருணாநிதி, தர்மபுரி தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக நியமிக்கப்படுகிறார்.

செங்கல்பட்டு கூடுதல் அரசு வக்கீல் ஆர்.ஜெயரெத்தினகுமார், ஆலந்தூர் குற்றத்துறை உதவி இயக்குனராக மாற்றப்பட்டார். சேலம் கூடுதல் அரசு வக்கீல் எல்.பிச்சைராஜன், செங்கல்பட்டு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார்.

குற்றத்துறை உதவி இயக்குனர் டி.பன்னீர்செல்வம், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை கூடுதல் அரசு வக்கீல் ஏ.சேகர், விருதுநகர் குற்றத்துறை உதவி இயக்குனராக மாற்றப்பட்டார்.

நாகை கூடுதல் அரசு வக்கீல் எஸ்.அம்சவேணி, நாகை குற்றத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்