முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் - இந்தி - ஆங்கிலத்தில் பேசி அசத்திய மோடி

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, செப். 28 - திருச்சியில் நடைபெற்ற இளம் தாமரை மாநாட்டில் சில நிமிடங்கள் தமிழில் பேசி அசத்தினார் நரேந்திர மோடி.  திருச்சியில் பா.ஜ.க இளம் தாமரை மாநாடு நடைபெற்றது. இந்தியில் தனது உரையை தொடங்கிய மோடி, 65 நிமிடங்கள் தமிழ், ஆங்கிலம், இந்திய என 3 மொழிகளில் பேசி அசத்தினார். தமிழ் மண்ணே வணக்கம் என தமிழில் தொடங்கியவர் பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப சிங்கங்களே, தமிழ்நாடு பெருமை உடையது. கம்பன், வள்ளுவர் பிறந்த பூமி, தமிழ் நாடு என்று சொன்னால் காதில் தேன் வந்து பாயும். தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அதற்கொரு குணம் உண்டு என்ற ராமலிங்கம் பிள்ளையும், செந்தமிழ் நாடெனும் போதினிலே இடைத்தேன் வந்து பாயுதே காதினிலே என்று பாரதியும் பாடியுள்ளனர். திருச்சி தமிழகத்தின் மையத்தில் உள்ள மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம். சோழர்களின் தலைநகர் உறையூர் இருக்கும் இடம் திருச்சி. இந்த நகரில் வசிக்கும் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்று தமிழில் பேசியவர் தொடர்ந்து ஆங்கிலத்தில், தமிழக மக்கள் கடும் உழைப்பாளிகள். அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள். மன்னன் போல் இருப்பார்கள். ஆனால் விசுவாசமாக இருப்பார்கள். தமிழ் பசுமையான மொழி மட்டுமல்ல. உலகில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் செம்மொழிகளில் முக்கியமானதாகும். சங்க இலக்கியங்களில் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு உள்ளது. 

தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் பொதுவான அம்சங்கள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் மினி குஜராத்தாக சென்னையின் சவுகார்பேட்டை உள்ளது. அது போல குஜராத்தில் மினி தமிழ்நாடாக மணிநகர் உள்ளது. இந்த மணிநகர் தொகுதியில் இருந்து நான் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அங்கு அதிகமாக உள்ள தமிழர்கள்  என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர். மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குரிய ராஜாஜி தமிழகத்தை சேர்ந்தவர் என்றார் நரேந்திர மோடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago