முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பாலையில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

மதுரை, செப் 29 _ மதுரை  மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்ரூபவ் திருப்பாலையில் அமைந்துள்ள கந்தசாமி சேர்வை திருமண மண்டபத்தில்ரூபவ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர்  எல்.சுப்பிரமணியன் தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிஎஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலையில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ  192 பயனாளிகளுக்குரூ87 இலட்சத்து 57 ஆயிரத்து

800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது,மக்கள் பணியாற்றுமாறு  தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  தமிழக மக்களை நோக்கி அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கடந்த 2

ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் நமது  தமிழக முதலமைச்சர் அம்மா .  நமது மாவட்ட கலெக்டர்  கூறியது போல அனைவருக்கும் கல்வி,முதியோர் உதவித்தொகை,பசுமை வீடுகள் போன்ற பல அரசு நலத்திட்டங்கள் உங்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழக முதலமைச்சர்  கூறியது போல மக்களுக்காகத்தான் திட்டமே தவிர திட்டத்திற்காக மக்கள்இல்லை.   இதுவரை தமிழ்நாட்டில்  1 கோடியே 85 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா 20 கிலோ அரிசி

வழங்கப்பட்டுள்ளது.  நடுத்தர மக்களுக்கு கிலோ 50 ரூபாய் மதிப்புள்ள அரிசிரூ  20க்கு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத்திட்டத்தின் மூலம் 2

இலட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.  இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 5945 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.  தமிழக முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 3784 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.  முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானவர்களுக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு மதிய உணவாக 14 வகையான சத்துணவு வழங்கப்படுகிறது.  மதுரை

மாவட்டத்தில் இதுவரை 10676 ஏழைப்பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு ரூ 12 கோடியே 24 இலட்சத்து 65 ஆயிரத்து 470 ஆகும்.  இந்த ஆடுகளுக்கு இலவச மருத்துவக்காப்பீட்டு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.  பசு மற்றும் ஆடுகளுக்கு உணவாக

வழங்கப்படும் பச்சைபுல்லுக்கு தமிழக அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழக

முதலமைச்சரின்  சிறப்பான திட்டங்களுள் ஒன்றான  அம்மா உணவகத்தில் தரமான உணவு மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.  தயிர்சாதம் ரூ3க்கும் சாம்பார் சாதம் ரூ.5க்கும் 60 கிராம் எடையுள்ள ஒரு இட்லி ரூ1க்கு வழங்கப்பட்டு வருகிறது.

மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தமிழக அரசால் அன்னதானம் வழங்கப்படுகிறது.  இதன் மூலம்

தமிழக மக்கள் அனைவருக்கும்  தமிழக முதலமைச்சரின்அன்னபூரணியாக திகழ்கிறார்கள்.  நீங்கள் செலுத்தும் வரிப்பணத்தினை சிந்தாமல்,சிதறாமல் சிக்கனமாக உங்களுக்கு நலத்திட்டங்களாக கொடுக்கிறார் நமது கு தமிழக முதல்வர் அம்மா. 

2023ல் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக திகழ வேண்டும் என்பதற்காக ரூ.15 இலட்சம் கோடி நிதி ஒதுக்கி திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.   தமிழக முதலமைச்சர் ,தமிழக மக்கள் வாழ்நாளில் இனி எந்தவொரு இலவசத்திற்காகவும் கையேந்தக்கூடாது என்பதனை இலட்சியமாக கொண்டுள்ளார்கள் .இப்படி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வரும் முதல்வர் அம்மாவின் கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதல்வர் அம்மாவை வெற்றி பெற செய்ய வேண்டும். அந்த வெற்றியின் மூலம் முதல்வர் அம்மா இந்திய நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அப்போது தான் மேலும் பல்வேறு திட்டங்களை உங்களுக்கு அம்மா அள்ளி தருவார். இன்றைக்கு மத்திய அரசு நிதிதர மறுத்து வரும் சூழ்நிலையிலும் , பல்வேறு திட்டங்களை முதல்வர் அம்மா நிறைவேற்றி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பிரதமராக அம்மா வந்துவிட்டால் இந்தியாவிற்கே கொடுக்கின்ற சூழ்நிலை உருவாகும். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்வர்  அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.   

    இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரால்கருணை அடிப்படையில் எஸ்.புளியங்குளத்தை சேர்ந்த வருவாய் துறையின் மூலம் முதியோர் உதவித்தொகை,விதவை உதவித்தொகை கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகைகள் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது.   ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 21 நபர்களுக்கு பசுமைவீடுகள்  வழங்கப்பட்டது.  இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் மூலம் 10 நபர்களுக்கு ரூ10

இலட்சம் மதிப்பிலும்,மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் ஏழைப்பெண்களின் திருமண  நிதியுதவித்திட்டம் 56 நபர்களுக்கு  வழங்கப்பட்டது.வேளாண்மைத்துறையின் மூலம் திருந்திய நெல் சாகுபடித்திட்டத்தின்படி 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது. வருவாய்த்துறை மூலம் 30 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா  வழங்கப்பட்டது.  8 நபர்களுக்கு பட்டா மாறுதல்களும்,14 நபர்களுக்குசாதிச்சான்றிதழ்களும், 11 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்  மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,சட்டமன்ற உறுப்பினர்கள் (திருமங்கலம்) எம்.முத்துராமலிங்கம்,(மதுரை கிழக்கு) கே.தமிழரசன்,(மதுரை மத்தியம்) சுந்தர்ராஜன்,மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியாஹோசமின்,செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன்,வருவாய்த்துறை அலுவலர்கள்,  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்