முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் அமைச்சர் மிதிவண்டிகள் - புத்தகங்கள் வழங்கினார்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பழனி செட்டிபட்டியில் இன்று (28.09.2013) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதி அமைச்சர்   திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்போடுகள்; மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாய்யில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து, சிறப்பாகவும் செம்மையாகவும் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில், மாணவ, மாணவியர்களின் ஏழ்மையின் காரணமாக அவர்களின் கல்வி எந்த ஒரு சுூழ்நிலையிலும் தடைபடக் கூடாது என்பதற்காக கல்வி ஊக்கத்தொகை, விலையில்;லா பாட புத்தகம், நோட்டுப்புத்தகம், வருடத்திற்கு நான்கு செட் சீருடைகள்;, காலணிகள், புத்தகப்பை, வடிவியல் பெட்டிகள், வரைப்பட புத்தகங்கள், கிரையான்ஸ், கணித உபகரணங்கள், மிதிவண்டிகள், பேரூந்து பயணஅட்டை,  13 வகையான கலவை சாதம், மேல்நிலைப்பள்ளியில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு உலக அறிவை எளிதில் பெறும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு மாதாந்திர உதவித்தொகையினை ரூ.500ஃ-லிருந்து ரூ.1000ஃ-மாக உயர்ததி வழங்கிட உத்தரவிட்டார்கள் அதனடிப்படையில் தமிழகத்தில் இதுவரைக்கும் 34 இலட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தி வருகிறார்கள். ஏழை எளியோர்களுக்கு 1 கோடியே 73 இலட்சம் விலையில்லா வேஷ்டிகளும், 1 கோடியே 72 இலட்சம் சேலைகளும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெற்று வழங்கப்படுகிறது. மேலும் பெண்களின் வேலைப்பழுவினை குறைக்கும் விதமாக தகுதி வாய்ந்த 1 இலட்சத்தி 84 ஆயிரம குடும்ப அட்டைதாரர்களுக்கு; விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கி பெண்களின் சமுதாய முன்னேற்றமடைய வழிவகை செய்துள்ளார்கள். தனிமனித வருமானம் பெருகினால் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றமடையும், குடுப்ப பொருளாதாரம் பெருகினால் கிராம பொருளாதாரம் முன்னேறும். இதன்மூலம்  ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வழி வகை செய்யும்.

மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 பொறியியல் கல்லூரிகளையும், 36 கலை மற்றும அறிவியல் கல்லூரிகளையும், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 54 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிகழ்த்தி உள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் 1 பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணி ரூ.96 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகின்றது. மேலும், புதிதாக தொழிற் பயிற்சி நிலையம் அமைத்திட ரூ.6ஃ- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீரபாண்டி பேரூராட்சியில் தற்காலிகமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் செவிலியர் கல்லூரியை  துவங்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்  மாணவ, மாணவியர்களின் கல்விக்காக எண்ணற்ற பலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள் எனவே, மாணவ, மாணவியர்கள் படிப்பது ஒன்றே தனது கடமையாக கொண்டு தனக்கும் தனது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

பெரியகுளம் கல்வி மாவட்டம்  ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த 1765 மாணவர்களுக்கும், 1569 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3334 மாணவ, மாணவியர்களுக்கும், பெரியகுளம் வட்டத்தைச் 1501 மாணவர்களுக்கும், 1637 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3138 மாணவ, மாணவியர்களுக்கும், உத்தமபாளையம் கல்வி வட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தைச் சேர்ந்த 1240 மாணவர்களுக்கும், 1428 மாணவியர்களுக்கும் என மொத்தம் 2668 மாணவ, மாணவியர்களுக்கும், கம்பம் வட்டத்தைச் சேர்ந்த 1996 மாணவர்களுக்கும், 1848 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3844 மாணவ, மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 12984 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 75980 மாணவ, மாணவியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்குரிய விலையில்லா பாடபுத்தகங்களையும், பாடக்குறிப்பேடுகளையும் மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ், 22,283 குழந்தைகளுக்கு ரூ.27,85,375ஃ- மதிப்பிலான விலையில்லா இரண்டு ஜோடி வண்ண சீருடைகளை மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.சோமுபாண்டியன் வரவேற்புரையாற்றினர். மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.எஸ்.மாகலிங்கம், நகர்மன்றத்தலைவர்கள் திரு.சிவக்குமார்,; திரு.முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் திரு. எம்.பி.இராமர், திரு.செல்லமுத்து, திரு.தீபாவளிராஜ், திருமதி.அம்சகோமதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்    திரு. என்.ஆண்டி, பழனி செட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.வாசு, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திரு.இராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி. ராஜரரஜேஸ்வரி நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்