முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா குடிநீரை தொடங்கி வைத்த முதல்வருக்கு பாராட்டு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.29 - சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் அம்மா குடிநீரை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழக மக்களின் நலம்- மக்களுக்காகவே  நான் என்ற அம்மாவின் தாரக மந்திரம் தண்ணீரை நோக்கி மீண்டும் திரும்புகிறது.

இந்திய பேரரசின் நேரடியான துறை மட்டுமல்ல, உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட அரசு நிறுவனம் 'ரயில்வேத்துறை' என்ற பெருமைக்கொண்டது - அத்துறை நேரடியாக தயாரித்து வழங்கும் குடிநீர் ஒரு லிட்டரின் விலை -ரூ 15, தனியாரை சொல்லவே வேண்டாம் ஒரு லிட்டர் ரூ20 முதல் ரூ 30 வரை!

ஆனால்-நம் அம்மா நமக்கு வழங்கியுள்ள, இதோ கையில் வைத்துள்ளீர்களே அதன் விலை என்ன?....

10 ரூபாய்..... அம்மா குடிநீர் 

இல்லாத ஊருக்கு இருட்டில் வழிகேட்கும்- எதிராளிகள்  இருக்கும்   இம்மண்ணில்.....

 எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா இந்திய அளவில் யாருக்கும் இயலாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு அளிக்கிறார்கள்!

10 ரூபாய்க்கு 1லிட்டர் குடிநீர் வழங்கும்.

ஆம்- இன்றைய தினம் கோவிலுக்கு சென்று யாரும் -மனதால் வேண்டியதை-தானாக இறைவன் கொடுப்பதாக என்னி ஏறத்தாழ எல்லோரும் கோவிலுக்கு சென்று அவரவர் மதக் கடவுளை வேண்டுகிறோம்!

சென்னை மாநகருக்கு-குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகளை-அதிலும் பழுதான, பழமையான குடியிருப்புகளை அகற்றி 2250 புதிய குடியிருப்புகளை புதிதாக கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூபாய் 204.36 கோடி ரூபாய்க்கு கேட்காமலே நிதி ஒப்புதல் அளித்து-

சென்னையில் டாக்டர் ஆர்.கே.நகர், ரங்கநாதபுரம், பார்த்தசாரதிபுரம்,பெரம்பூர் சத்தியவானிமுத்துநகர், எழும்பூர் நேரு பார்க் திட்டம், பிள்ளையார் கோவில் திட்டம், சேப்பாக்கம் நாவலர் நகர், அயோத்திகுப்பம், கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆண்டிமான்ய தோட்டம் மற்றும் பல்லக்குமான்ய தோட்டம் ஆகிய இடங்களில்-புத்தம் புதிய குடியிருப்புகளை கட்டி வழங்க உள்ளார்.

இத்திட்டத்தில்-தமிழகம் முழுமையும் 3500 குடியிருப்புகளுக்கு 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள் அதில் சென்னைக்கு மட்டும் 2550 குடியிருப்புகளுக்கு ரூபாய் 204.36 கோடியாகும் அதாவது 73 சதவீதமாகும், ஆம்- எங்கள் தெய்வதாயின் தலைப்பிள்ளை சென்னை மாநகருக்கு வாரி வழங்கிய எங்கள் தெய்வத்திற்கு-இம்மாமன்றத்தின் இதயத்தை-கையொலி மூலம் காணிக்கையாக்குகிறோம்.

ஈரான் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 16 பேரை தனது துரித முயற்சிகளால் மீட்டு வந்திருக்கும் ஈரிலை இயக்கத்தின் ஈகையுடைய தாய்க்கு இந்த மாநகராட்சி மன்றத்தின் உளமார்ந்த நன்றியும், நெஞ்சார்ந்த போற்றுதலும்.

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு... என்றே அலைமீது வலைகொண்டு வாழும் மீனவச் சமூகத்திற்கு எப்போதும் அரணாக இருப்பது இலைகொண்ட இயக்கம்தான் என்பதை இந்த நாடே அறியும். அதற்கு கூடுதல் சான்றாகவே அமைந்திருக்கிறது ஈரான் சிறையில் வாடிய 16 தமிழக மீனவர்கள் நம் தாயின் முயற்சியால் மீட்கப்பட்டிருக்கும் பெருமை மிக்க நிகழ்வு.

தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் ஈரான் நாட்டுக் கடல் எல்லைப் பகுதிக்குள் வழிதவறி சென்றதன் காரணமாக, அந்நாட்டு கடலோரக் காவல்படை கைது செய்து, அவர்களை கடந்த 9 மாதங்களாக ஈரான் சிறையில் அடைத்திட்டதையொட்டி, அவர்களை விடுவிக்க தொடர்ந்து நம் பேரறிவுத் தாய் இந்திய பிரதமருக்கு கடிதங்கள் எழுதி வலியுறுத்தியும், அதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டுத் தூதரகத்துடனான தொடர்புகளால் சிறையிலிருந்த தமிழக மீனவர்களை நம் தாய் ஆளும் அரசு தற்போது மீட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில், சிறையில் வாடிய 16 மீனவர்களுடைய குடும்பங்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு நம் வாஞ்சைக்கொண்ட தாயின் பொற்கரங்கள் தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கியது என்பதும் கனிவின் உருவாக நம் காவியத் தாய் திகழ்கிறார் என்பதற்கு கண்முன் சாட்சி!

இந்நிலையில், நம் கருணைத் தாயின் கடும் முயற்சியின் பலனாக 16 மீனவர்களும் ஈரான் நாட்டு சிறையிலிருந்து திங்கட்கிழமை விடுவிக்கப்பட, 16 மீனவர்களும் செவ்வாய்க்கிழமை மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

நம் கனிவுமிகு தாயின் கட்டளையின்பேரில் மும்பை சென்று 16 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் வரவேற்று, அவர்களின் சொந்த கிராமங்களுக்கு தமிழக அரசின் செலவிலேயே அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தும், மீனவர்களின் நலனை கண்ணும் கருத்தோடும் காத்திருக்கிறது நம் காவியத்தாயின் கழக அரசு!

துடுப்பை நம்பி அடுப்பெரிக்கும் உழைப்பாளிச் சமூகம் நம் காவியத்தாயை கைகூப்பி வணங்குகிறது! கண்ணீர் பெருக நன்றி உரைக்கிறது!

அவ்வழியிலே இந்த சென்னை மாநகராட்சி பெருமன்றமும் காலத்தே விரைந்து கருத்தோடு கடமையாற்றி, சிறைகளில் வாடிய மீனவர்களை சிரமேற்கொண்டு மீட்டுவந்த நம் அன்னைத் திருமகளாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மனதார வணங்கி போற்றுகிறது.

சிறப்பு தீர்மானம்: 5

தமிழகத்தின் தானிய களஞ்சியம்  பிரிக்கப்படாத  தஞ்சை  மாவட்டமாகும்.

இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என மூன்று மாவட்டங்களாக பிரிந்தாலும் நெல் சாகுபடியை தவிர வேறு எதுவும் பயிரிடாத சழ்நிலையில்  அந்த விவசாய பெருமக்கள் வெள்ள நேரத்தில் நெற்பயிர் மூழ்கியும், வறட்சி காலத்தில் நெற்பயிர் கருகியும் மீறி விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய- அரசு தேவைக்கு ஏற்ப நேரடி கொள்முதல் நிலையங்களை தொடங்கி ஒவ்வொரு பருவத்திற்கும் நடத்தி வருகிறது. ஆனால் , டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் நெல்லை பயிரிடும் உழவர் பெருமக்கள் தங்களது விளைபொருளை தனியாரிடம் விற்று கிடைத்த விலையை பெற்று வந்தனர்.

ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுமையும் உள்ள விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களது விளை பொருளான நெல்லை விற்பனை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய வற்றில் புதிதாக கொள்முதல் நிலையம் ஆரம்பிக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டு  உலகோர்க்கு  உணவளிக்கும் உழவர் பெருமக்களின் வாழ்கைக்கு  ஒளி ஏற்றி உள்ளார்கள்.

அத்துடன் நெல்லுக்கு குவின்டால் ஒன்றிற்கு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான மோட்டா ரகத்திற்கு   ரூ1310 உடன்  தமிழக அரசு சார்பாக ரூ50 சேர்த்து  ரூ1360 யும், 

சன்ன ரக நெல்லுக்கு குவின்டால் ஒன்றிற்கு  மத்திய அரசு அறிவித்த ரூ1345 உடன் தமிழக அரசு சார்பாக ரூ70 சேர்த்து ரூ1410 வழங்க அறிவித்து தமிழக உழவர் பெருமக்களின் ஏகோபித்த நல்ல ஆசியை பெற்றார்கள்.

ஆகவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இம்மாமன்றம் தனது பலத்த கையொலி மூலம்  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறது. 

சிறப்பு தீர்மானம்: 6.

'சினிமா' என்ற பொழுதுபோக்கு ஊடகம் ஒன்று இன்று இல்லையெனில் உலக மக்களில் பாதி பேர்-பைத்தியம் பிடித்து-அலைவார்கள்- 

உலகின் பாதி குடும்பம் பிரிந்திருக்கும்,

ஒரு நாட்டின் கலாச்சாரம் பண்பாடு அன்று இலக்கியங்களில் இருந்தாலும்,

இன்று நேரடியாக சினிமா என்ற ஊடகம் ஒன்றினால்தான் அறிய முடியும் என ஒரு பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் கூறியுள்ளார்.-

அந்த அளவிற்கு-சினிமா என்பது மனித வாழ்வின் வழியாகவும், ஒளியாகவும் ஒன்றாகி விட்ட ஒன்றாகும்.

மற்றொரு அதிசயம் என்னவென்றால்-

 உலகம் முழுவதும் நம் தமிழர்கள் வியாபித்திருந்தாலும், அங்கே பிறக்கும் நம் தமிழ் குழந்தைகளுக்கு, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, என்ற உறவுகள் என்னவென்றே தெரிந்திருக்காது-ஏன் நம் நாட்டின் நகரபகுதிகளிலும் இதே நிலை  தான். அந்த உறவு முறைகளின் பலத்தை-அவர்களுக்கு நினைவூட்டி கொண்டிருப்பது-தமிழ் சினிமாக்கள் தான்,

அதுமட்டுமல்ல-

 நம் தமிழ் சினிமா நம் தமிழகத்திற்கு ஐந்து முதலமைச்சர்களை தந்து பெருமை தேடிக்கொண்டது.!

இந்திய சினிமா நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைத்தது. 

ஒவ்வொரு சினிமாவும்-

ஏழுபேரால் சிந்திக்கப்பட்டு-

எழுபது பேரின் நேரடி உழைப்பாலும்-

எழுநூறு பேரின் மறைமுக உழைப்பாலும்-எழுபதாயிரம் பேரின் உதவியால்-

திரையரங்கில் அன்றாடம் ஏழு லட்சம் பேர்-தமிழகத்தில்  திரைப்படம் பார்கிறார்கள்-தமிழகத்தில் உள்ள 7.213 கோடி மக்கள் அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் பார்க்கும்  ெதாலைக்காட்சியின் தாயான சினிமாவின் 100 வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பெருமை படுத்தியது மட்டுமின்றி அவ்விழாவிற்கு ரூபாய் 10 கோடியை அள்ளிவழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மாமன்றம் -தனது கையொலி மூலம் மனதார பாராட்டி மகிழ்கிறது.

இம்மாமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்