முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 4ம் தேதி திருப்பதி குடை ஊர்வலம் துவக்கம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை.செப்,29 - திருமலை வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்காக தமிழகத்தின் சார்பில் எடுத்துச் செல்லப்படும் திருப்பதி குடைகள் சென்னையில் 4ம் தேதி ஊர்வலமாகப் புறப்படுகிறது.

இது குறித்து இந்து தர்மமார்க்க சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-

திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை மூலமாக 11 அழகிய திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன.

அக்டோபர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி குடை ஊர்வலம் துவங்குகிறது.

இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னுனூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இரவு சென்று சேர்கிறது.

பிறகு அக்டோபர் 5-ந்தேதி ஐ.சி.எப்., ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம். 6-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர் வழியாக திருமுல்லைவாயில் செல்கிறது.அதை அடுத்து 7-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், மணவாளநகர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தங்குகிறது.பின்னர் அங்கிருந்து நேராக 8-ந்தேதி திருப்பாச்சூர் வழியாக திருப்பதி சென்றடைகிறது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள் திருப்பதி குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்