முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

கோலாலம்பூர். செப்.29 - ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கு  வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவை வீழ்த்தி இந்தப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

8_வது ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் 3_வது இடத்தில் சீனாவை எதிர்கொண்டது இந்தி.யா. அனுராதாதேவி, வந்தனா கட்டாரியா ஆகியோர் அடித்த கோல்களால் இந்தியா முதல் பாதியில் 2_0 என்று முன்னிலை பெற்றது. பின் பாதியில் இந்திய வீராங்கனைகள் தடுப்பு ஆட்ட யுக்தியை கோட்டை விட்டதால்  சீன அணி பதில் கோல் திருப்பிய.து.  ஆட்டம்2_2 என்ற கோல்கணக்கில் சமனில் முடிந்தது. 

இதை அடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்திய கேப்டன் ரிதுராணி, அனுராதா ஆகியோரும்., சீன தரப்பில்  லியாங் மெயு, ஜியாவ்ஜியாவும் கோல் அடித்தனர். மறுபடியும் சமநிலை தொடர்ந்தது. 

பின்னர் சடன் டெக் முறை கொண்டுவரப்பட்டது.  இதில் முதல் வாய்ப்பை சீனாவின் மெயு  வீணடித்தார். இதை அனுராதா கோல் ஆக்கினார். இந்திய அணி 3_2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்