முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நாடு திரும்பியதும் அவசர சட்டம் குறித்து முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

சென்னை, செப். 30 - மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:_ குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி நிலைப்பாடு குறித்து கொண்டு வரப்படும் அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ஒரு கட்சி என்றால் அதில் கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும்.

பிரதமர் நாளை நாடு திரும்பியதும், இந்த விஷயம் குறித்து அமைச்சரவை கூடி மீண்டும் விவாதித்து ஒரு முடிவை எடுக்கும். ராகுல் காந்தி எழுதிய கடிதத்துக்கு பிரதமரும் அவசர சட்டத்தின் காரணம் பற்றி விளக்கமாக பதில் அனுப்பி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி சிறப்பாக ஆட்சி நடத்துவதாக பலர் கூறுகின்றனர். நான் அந்த மாநிலத்துக்கு சென்று பார்த்ததில் உண்மை நிலை வேறு மாதிரி உள்ளது. மலைவாழ் மக்களுக்கு அங்கு அடிப்படை வசதி இல்லை. விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்லாட்சி நடப்பதாக கூறுவது வியப்பாக உள்ளது. இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் விசை படகுகளை மீட்டு கொடுக்க உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும்.

இலங்கை தூதருக்கு கடிதம் எழுதி, தமிழக மீனவர்கள் மீது தவறு இல்லை என்று கூறி உள்ளோம், மேலும் அங்குள்ள நீதிமன்றத்தில் இதை எடுத்துரைத்து படகுகளை மீட்டு கொடுப்போம்.

கூடங்குளம் அணு உலை கழிவுகளை கடலில் கொட்டுவதாக தவறாக வதந்தி பரப்பரப்படுகிறது. அணு உலை இன்னும் முழு செயல்பாட்டுக்கே வரவில்லை. பிறகு எப்படி கழிவுகள் கொட்டப்படும்? அன்னிய சக்திகளின் தூண்டுதலால் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. இதை அரசு முறியடிக்கும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்