முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகுகளை மீட்பது குறித்து தி.மு.க. பிரச்சினை எழுப்பும்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.30 - தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். அப்போது, இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் விசைப்படகுகள் நாட்டுடமை ஆக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் தமிழக மீனவர்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வாழ்வாதாரமும் பாதிக்கும்.

எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்யது அவசியம். எனவே கைபற்றப்பட்டுள்ள படகுகளை மீட்டுக் கொண்டு வர உதவ வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து முடிவில்லா துயரங்களை சந்திக்கிறார்கள் இதற்கு முடிவு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 'மீனவர்களின் படகுகளை நாட்டுடமை ஆக்கும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்புவார்கள். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்று உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.பிக்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago