இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, செப். 30 - இலங்கை கடற்படையால் அடிக்கடி இன்னல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை_தமிழக மீனவர்கள் இடையே டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 20.9.2013 அன்று தங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவு கூறுகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடுமையான தாக்குவது நீடித்ததாலும் இதில் இந்திய அரசு கடுமையான வலிமையான நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற தாக்குதல், கடத்தல் போன்றவை பாக்ஜலசந்தியில் நடந்ததாலும் கடத்தப்பட்ட மீனவர்கள் நீண்ட நாட்கள் ஜெயிலில் வைக்கப்பட்டதாலும் இந்த கடிதம் எழுதப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களிடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று எங்கள் மீனவர்கள் நினைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுடைய கோரிக்கைக்கு உதவி செய்யும் வகையில் இதை செய்தோம். இதற்கு மேலும் தாக்குதல் நடக்க கூடாது. மீனவர்கள் கடத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்ட நாள் சிறை வைப்பதை நிறுத்த வேண்டும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் தொடர்ந்து அவர்கள் மீன் பிடிக்கும் உரிமை வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகளை மதிக்க தேவையில்லை என்ற வகையில் இந்த பேச்சு வார்த்தை நடத்த விரும்பினோம்.
மேலும் கச்சத்தீவு தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அது பற்றியும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்க கூடாது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தோம். ஆனால் நான் எழுதிய கடிதத்தின் மை காய்வதற்கு முன்பே 22.9.2013 அன்று மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கடத்தி சென்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 மீனவர்களை 6 படகுகளுடன் அவர்கள் கைது செய்துள்ளனர். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7.10.2013 வரை காவலில் வைக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களை 19.9.2013 அன்று 5 படகுகளுடன் கைது செய்து 10.9.2013 வரை காவலில் வைக்க உத்தரவிட்டு யாழ்ப்பாணம் ஜெயலில் அடைத்துள்ளனர். தற்போது 130 தமிழக மீனவர்கள் இலங்கை பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் 29 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பாம்பனை சேர்ந்த 35 மீனவர்களும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 41 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 23.9.2013, 25.9.2013 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்ட அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களின் 18 படகுகளும் விடுவிக்கப்படவில்லை.
21.4.2005 ல் நடந்த இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையிலும், அதன் பிறகு நடந்த 2 வது பேச்சுவார்த்தையிலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் 3 மாதம் வரை ஜெயலில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காதது வேதனையை தருகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான பிரச்சினை. பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. ஆனால் இந்த ஏழை மீனவர்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் மத்திய அரசு கைவிட்டு விட்டது. இதனால் அவர்கள் தினமும் இலங்கை படையினரால் தாக்குதல், கடத்தல் போன்ற சம்பவங்களை சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் வெளியுறவு ரீதியாக இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வரையில் இதற்கு தீர்வு ஏற்படாது. இதை செய்தால்தான் அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். இது போன்ற பிரச்சினை எதிர்காலத்தில் வராமல் இருக்கும். இலங்கை அரசு இந்திய அரசுடன் இது சம்பந்தமாக உரிய தீர்வை ஏற்படுத்தினால் அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை நீண்ட நாள் ஜெயிலில் அடைத்து வைத்து இருப்பதால் அவர்களின் குடும்பத்தினர் தினசரி வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதுடன் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார்கள். மேலும் அவர்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு இதில் கடும் நடவடிக்கை எடுத்து இலங்கை ராணுவ படையினர் நமது மீனவர்களை தாக்குவது, கைது செய்வது முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மீனவ சமுதாயத்தின் வாழ்க்கை அமைதியாக இருக்காது. எனவே இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.