முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களின் நில அதிகாரம் பறிப்புக்கு கண்டனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.1 - இலங்கையில் தமிழர்களின் நில அதிகாரம் பறிக்கப் பட்டுள்ளதற்கு பாமக தலைவர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் கூறியதாவது:

இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13_வது திருத்தத்தின்படி நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் ராஜபக்சே தலைமையிலான தேசிய அரசுக்கு மட்டும் உண்டு. மாநில அரசுகளுக்கு இல்லை என்று அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வந்துள்ள தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களது நிலங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்படும் என்றார். 

தொல் திருமாவளவன் கூறியதாவது:

ராஜீவ் காந்தி_ஜொயவர்த்தனே ஒப்பந்தப்படிமாகாண சபைகளுக்கு நிலம் தொடர்பான அதிகாரம் வழங்கியது. வடக்கு மாகாணத்தில் அரசு அமையாத காரணத்தால் இலங்கை அரசு கவலைப்படாமல் இருந்து வந்தது. அங்கு தற்போது அரசு அமைந்துள்ளதால் இலங்கை அரசு நில அதிகாரத்தை பறித்துள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்