முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். விவகாரங்களில் சீனிவாசன் தலையிட கூடாது

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, அக். 2 - பி.சி.சி.ஐ.க்கு மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ். சீனிவாசன், ஐ.பி.எல். மற்றும் சூதாட்டம் தொடர்பான விவகாரங்களில் தலையிட கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பி.சி.சி.ஐ. தலைவராக அவர் தொடரலாம். ஆனால் ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான விசாரணையின் நேர்மை தன்மை எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ஜே.எஸ். கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. பீகார் கீரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த மனுவில் சுப்ரீம் கோர்ட் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிபதிகள் கூறும் போது,

ஐ.பி.எல். விவகாரம் தொடர்பான விசாரணை அமைப்பை ஏற்படுத்த சீனிவாசன் அவகாசம் காட்ட கூடாது. விசாரணை அமைப்பின் தலைவராக அருண் ஜெட்லி அல்லது வினய் தத்தா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் நியமிக்க வேண்டும் என்று சீனிவாசன் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து பீகார் கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் உள்ள போது ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பெரிய பிரச்சினை இருப்பது தெளிவாகிறது. பி.சி.சி.ஐ தனது நம்பகத்தன்மையை ஏன் இழந்தது என்று தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பி.சி.சி.ஐ. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரம் வாதாடுகையில், பி.சி.சி.ஐ.யின் விதிமுறைகளின்படி வாரியத்தில் சில செயல்பாடுகளுக்கு அதன் தலைவர் முக்கியம். ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தும் அமைப்பின் தலைவராக ஜெட்லி அல்லது தத்தா நியமிக்கப்பட வேண்டும் என்றார். பின்னர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ஐ.பி.எல். என்பது பி.சி.சி.ஐ.யின் ஒரு பகுதி. சென்னை சூப்பர் கிங்ஸ்சின் கவுரவ உறுப்பினரான குருநாத் மெய்யப்பன் சீனிவாசனின் மருமகன். சென்னை அணி இந்திய சிமிண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்திய சிமிண்ட்ஸ் நிறுவனத்தில் சீனிவாசனும் அங்கம் வகிக்கிறார். குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய சூழலில் ஒருவேளை சென்னை அணியின் உரிமையை நீக்கும் முடிவு சீனிவாசன் முன் வரும். அப்போது நேர்மை தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான முழு விசாரணையையும் பி.சி.சி.ஐ.க்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிமன்றம் வரும்7 ம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்