முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன்சிங்கை நான் விமர்சிக்கவில்லை: நவாஸ்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.3 - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை  கிராமத்துப் பெண் என்று நான் விமர்சிக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், மன்மோகன்சிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றி அவர்கள் பேச்சு நடத்தினர். இது அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான் டி.வி. ஒன்றில் நிருபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மன்மோகன்சிங்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கிராமத்துப் பெண் என்று கூறியதாக ஒருவர் தெரிவித்தார். இதற்கு அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய நிருபர் கூறும்போது, நவாஸ் ஷெரீப் பிரதமர் மன்மோகன்சிங்கை கிராமத்துப் பெண்  என்று கூறவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் லண்டனில் நிருபர்களிடம் நவாஸ் ஷெரீப் கூறுகையில் நியூயார்க் நகரில் மன்மோகன்சிங்குடன் நடந்த பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருந்தது. அவரை நான் ஒருபோதும் கிராமத்துப் பெண் என்று கூறவில்லை.  அவருடன் காஷ்மீர் விவகாரம், நதிநீர் பங்கீடு, சியாச்சின், சர்கிரீக், பலுசிஸ்தான் பிரச்சனை பற்றி பேசினேன். அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை முழுவதுமே, பிரச்சனைக்குரிய பகுதிகளில்  அமைதியை ஏற்படுத்தும் நிலையில்தான் இருந்தது. 

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்