முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு விஷயத்தில் சமரசமே இல்லையாம்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

பத்மநாபபுரம், அக். 3 - முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்று கூறிய கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அதே நேரம் தமிழ்நாட்டுக்கு வழங்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். 

கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரி பிரச்சினை இருப்பது போல கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்த அணைக்கு பதிலாக புதிய அணைகட்டியே தீருவோம் என்று கேரளா முரண்டு பிடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. விசாரணை எல்லாம் முடிந்த நிலையில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. இந்த நிலையில் பத்மநாபபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கேரள முதல்வர் உம்மன்சாண்டி. அப்போது அவர் கூறியதாவது, 

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு தரப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் தரப்படும். முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தால் புதிய அணை கட்டுவோம். இவ்வாறு கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். கேரளத்தில் நவராத்திரி விழா வரும் 5 ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பத்மநாபசுவாமி ஆலயத்தில் இருந்து கலாச்சார ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் கிட்டத்தட்ட 10 நாட்கள் நடைபெறும். இது தொடர்பான நிகழ்ச்சியில் தான் நேற்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்