முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மகளிர் அணி கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.4 - தி.மு.க. மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜகான்பேகம் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றினர். 

கூட்டத்தில், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், மகளிர் அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, மகளிர் அணி துணைத் தலைவர்கள் டாக்டர் காஞ்சனா கமலநாதன், விஜயா தாயன்பன், மாநில மகளிர் அணிச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொண்டர் அணிச் செயலாளர் த.காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்