முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் சுப்பையா கொலை: சிறைக் கைதிகளிடம் விசாரணை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக். 4 - டாக்டர் சுப்பையா படுகொலை தொடர்பாக சிறையில்  உள்ள கைதிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

துரைப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் சுப்பையா கடந்த 14_ந்தேதி அபிராமபுரத்தில் கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னுசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்ததுஇதில் ஏற்பட்ட தகராறில் டாக்டர் சுப்பையா கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் புகார் கூறினர்.இதனால் பொன்னுசாமி, அவரது மனைவி மேரிபுஷ்பம், மகன்கள் வக்கீல் பெய்சில், என்ஜினீயர் போஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இதனால் பெய்சில், போஸ் இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பொன்னுசாமியும் அவரது மனைவி மேரி புஷ்பமும் கோவை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா கொலை செய்யும் காட்சி அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதில் கொலை செய்யும் நபர்களின் முகம் சரிவர தெரியாமல் உள்ளது. மேலும் அவர்கள் கூலிப்படையை சேர்ந்த ரவுடிகள் என்றும் தெரியவந்துள்ளது.இதுபற்றி விசாரிப்பதற்காக போலீசார் ஜெயிலில் உள்ள கைதிகளிடம் வீடியோ காட்சிகளை காண்பித்து அடையாளம் காட்டும்படி கேட்டு கொண்டுள்ளனர். சமீபத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ரவுடிகள் யார் யார்? கூலிக்கு வேலை செய்யும் ரடிவுகள் எந்தெந்த ஊரில் உள்ளனர் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago