முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிணற்றில் விழுந்தவர்களை மீட்டெடுத்த காவலருக்கு பரிசு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.4 - கிணற்றில் விழுந்தவர்களை மீட்டெடுத்த தலைமை காவலரை பாராட்டியதோடு அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து த•ழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கிராமம், வடக்குத் தெருவில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மனைவி வசந்தி  22.6.2013  அன்று  தனது சகோதரியின் மகள் சிறுமிமகேஸ்வரியுடன் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது,  சிறுமிமகேஸ்வரி எதிர்பாராரமல் கிணற்றில் தவறி விழுந்து விட்டாள்.  சிறுமிமகேஸ்வரியைக் காப்பாற்ற திருமதி வசந்தியும் கிணற்றில் குதித்துள்ளார்.  

கிணற்றில் விழுந்த இருவரும் கூச்சல் போட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த  ராமநாதபுரம் மாவட்டம், தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சமுதாய அக்கறையோடு  கிணற்றுக்குள் குதித்து உயிருக்குப் போராடிக்  கொண்டிருந்த வசந்தி மற்றும் சிறுமிமகேஸ்வரி ஆகிய இருவரையும் கயிறு மூலம் கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்து காப்பாற்றியுள்ளார். 

தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன், தனது  உயிரையும்  பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கிணற்றுக்குள் இறங்கி  திருமதி வசந்தி மற்றும் சிறுமிமகேஸ்வரி ஆகிய இருவரையும்  காப்பாற்றியமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் தீரச் செயலையும், தன்னலம் கருதா அவரின் சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும்  பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு  ஒரு லட்சம் ரூபாய்   பரிசுத் தொகையாக  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.      

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony