முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாது மணல் குவாரிகள் இயங்க அனுமதிக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.4 - அண்மையில் தாது மணல் குவாரிகளின் செயல்பாட்டை, தமிழக அரசு நிறுத்தி வைக்க உத்தரவிட்டதை அடுத்து, தமிழகத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் வருமானம் இன்றி நடுத்தெருவில் நிற்கும் பரிபாதச் சூழலுக்கு ஆளாகியுள்ளன. எனவே, தமிழக முதல்வர் இந்தத்தாது மணல் குவாரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று தென் மண்டல கணிம தொழிலாளர்கள் நலச்சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் தலைவர் பா.செ.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில் தாது மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும், தங்களது பாரம்பரிய தொழிலான விவசாயம் செய்தல், மீன் பிடித்தல் போன்றவற்றில் தொடர்ந்து வருமானம் குறைந்து வருவதால், இதுபோன்ற தாது மணல் குவாரிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இத்துறையில் 22 நிறுவனங்ள், 71 உரிமங்களைப் பெற்று செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் நேரடி வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளன.

தற்போது திடீரென அரசு இவற்றின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதால், இந்தத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும், பனை மரங்ளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பீடி சுற்றும் தொழிலும் தற்போது நசிந்து விட்டதாலும், இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வேறு தொழிலுக்கு உடனடியாக மாற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு இந்த தாது மணல் குவாரிகளை உடனடியாக இயங்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெவிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்