முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நடைமுறை குறித்து பயிற்சி: பிரவீண்குமார் அளித்தார்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.4 - பாராளுமன்ற தேர்தல் நடைமுறை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று 13 மாவட்ட கலெக்டர்களுக்கு பயிற்சி அளித்தார். கடந்த 25_ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்  ஆலோசனை நடத்தினார்.  அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக ஆலோசித்தார். அப்போது பிரவீண்குமார், அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் என அனைத்து விவரங்களையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரி, அலுவலகங்களிலும், வாக்கு சாவடி மையங்களிலும் தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 12_க்கும் மேற்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று விவாதித்தனர். 

இதையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 1_ம் தேதியன்று  வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் விளைவாக நேற்று 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. 

சென்னையில் அண்ணா மேலாண் இயக்குரகம் அலுவலகத்தில் இந்த பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமை வகித்தார். சென்னை, கோவை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் நடைமுறை குறித்து பிரவீண்குமார் விளக்கி கூறினார். 

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பிரவீண்குமார் கூறியதாவது:_

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிர படுத்தி உள்ளோம். அதையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளனர். புதிய வாக்காளர் சேர்ப்பும் இந்த முகாம்களில் நடக்கின்றன. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவர். அதனால் அவர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த, கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்று பயிற்சி நடக்கிறது. இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சிகள் நடைபெறும். வரும் 21, 22_ம் தேதிகளில் காவல்துறை அதிகாரிகள் கருத்தரங்கம் நடக்க உள்ளது. வரும் 27.28_ம் தேதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் நடைபெறும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago