முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தை ஆராய 28-ம் தேதி விண்கலம் ஏவப்படுகிறது

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மும்பை, அக். 4 - சூரிய குடும்பத்தில் நான்காவது கோளாக செவ்வாய்க் கிரகம் உள்ளது. பூமியில் இருந்து5 கோடியே46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய் கிரகம் உள்ளது. சிவப்பு ஆக்சைடு காரணமாக இது சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. அந்த கிரகத்தில் ஏராளமான தண்ணீர் இருப்பது1965 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் அங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது. எனவே அங்கு இடம் பிடிக்கும் போட்டி பல்வேறு நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது. இன்னும்20 ஆண்டுகளில் அங்கு குடியேற்றத்துக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்கா1997 ல் பாத் பைண்டர் என்ற விண்கலத்தை செவ்வாயில் இறக்கியது.

கடந்த ஆண்டு ரோவர் என்ற ரோபோட்டை அமெரிக்கா இறக்கி ஆய்வு செய்தது. 2033 ம் ஆண்டு செவ்வாயில் மனிதர்களை இறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்2021 ம் ஆண்டே செவ்வாயில் மனிதர்களை இறக்க இங்கிலாந்து திட்டமிட்டு வருகிறது. இந்த போட்டியில் தற்போது இந்தியாவும் இறங்கியுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை ஆராய சுமார்1350 கிலோ எடையுள்ள விண்கலம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் அந்த விண்கலத்துக்கு சிறப்பு பூஜைகள் போடப்பட்டன. பின்னர் அது ஹரிகோட்டாவுக்கு எடுத்து செல்லப்பட்டது. வரும்28 ம் தேதி மாலை4.15 மணிக்கு இந்த விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் செலுத்தப்படும். முதன் முதலாக இந்தியா அனுப்பும் இந்த விண்கலம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago