முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.4 - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அடுத்தமாதம் 5_ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இது குறித்து இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் தேவதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:_

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முருகேசன் முன்னிலையில் இன்று(நேற்று) விசாரணைக்கு வந்தது. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர், இரண்டாவது குற்றவாளியான விஜயேந்திரர் உள்பட 10 பேர் ஆஜரானார்கள். 13 பேர் ஆஜராகவில்லை. அவர்களுது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்து விட்டது. நவம்பர் 5_ந் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சங்கரராமன் மகன் ஆனந்த்சர்மா வழக்கு தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ நகலை வழங்கும் படி கோர்ட்டில் மனு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6_வது குற்றவாளியான கதிரவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். இதற்கிடையே தடை ஆணை வழக்கு காலவதியானது. ஆனந்த்சர்மா கேட்டிருந்த ஆதாரம் தொடர்பான வழக்கை அவர் வாபஸ் பெற்றால் நவம்பர் 5_ந் தேதியே தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும். 

விசாரணையின் போது ஆனந்த்சர்மா கட்டாயம் ஆஜராக வேண்டும். குற்றவாளிகள் தரப்பில் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்திரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்