முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் தீ விபத்து: பலத்த சேதம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில்11 கடைகள் எரிந்து நாசமாயின. தஞ்சை மாவட்டத்தில் கடற்கரை நகரமான அதிராம்பட்டினத்தில் பெரியமார்கெட்டில்100க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறிகள். இறைச்சி. மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மார்கெட்டில் வாங்காலம் காலை7மணி முதல் இரவு9 மணிவரை மார்கெட் செய்படும். இரவு9 மணிக்கு மேல் கடைகளை மூடிவிட்டு பெரும் பாலான வியாபாரிகள் வீட்க்கு செல்வர். சிலர் மார்கெட்டிலேயே தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு11 மணியளவில் மார்கெடின் தென் பகுதியில் உள்ள கடைகளில் திடீரென தீப்பிடித்தது. வியாபாரிகள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்ததால் தெரியவில்லை. தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவி எரியத் தொடங்கியது தூங்கி கொண்டிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

உடனடியாக பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த15 தினங்களாக இங்கு கடும் வெயில் கொளுத்துவதால் தீ கட்டுக்குள் வராமல் அதிகரித்துகொண்டே இருந்தது திருவாரூர் மவட்டம் முத்துப்போட்டை. பேராவுூராணி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன பெதுமக்கள்,வியாபாரிகளும் தீயணைப்பு வீரர்களும்2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மளிகைகடை டீகடை,ஓட்டல்,ஸ்விட் ஸ்டால் சலூன்கள் சரக்கு குடோன்கள் உள்ளிட்ட11 கடைகள் முற்றிலும் எரிந்து போனது. சேதமதிப்பு ரூ.15லட்சம் இதனையடுத்து பட்டுக்கோட்டை ஆர்டிஒ முருகேசன் தாசில்தார் முத்துக்குமார் இன்ஸ்பெக்டர் செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர் இந்நிலையில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர். அங்கிருந்து தீயணைப்பு வண்டி தாமதமாக வந்ததாக கூறி வியாபாரிகளும்,பொதுமக்களும் வீராகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது ஒருவர் ஒரு பாட்டிலை எடுத்து தீயணைப்பு வீரரை நேக்கி வீசினர். இதில் வீரமுத்து(55) என்ற வீரர் மண்டை உடைந்தது. ரத்தம் செட்ட செட்ட அவர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்