முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் தம்பி தற்கொலை முயற்சி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,அக்.4 - நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் தம்பியை மாவட்ட செயலாளரின் ஆதரவாளர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததால் அவர் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுண் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் குரளமுதன்(30). இவர் தி.மு.க. மாணவரணி நெல்லை பகுதி கழக துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது திருமணம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தான் திருமணம் நடந்தது. இவரது தங்கை தமிழரசி. இவர் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மீது பாலியல் புகார் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து கட்சியின் விரோத போக்கில் ஈடுபட்டதாகவும், கருப்பசாமிபாண்டியன் மீது பாலியல் புகார் கொடுக்க தமிழரசியை தூண்டியதாகவும், முன்னாள் நெல்லை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் நெல்லை தொகுதி எம்.எல்.ஏ.வுமான மாலைராஜா அதனைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் கருப்பசாமிபாண்டியனின் அண்ணன் மகன் பரமசிவஅய்யப்பன், வக்கீல் துரை ஆகியோர் கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதன் பின்பு தமிழரசியின் குடும்பத்திற்கு பல்வேறு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழரசியின் வீட்டு மீது சோடா பாட்டிலும் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் தமிழரசி தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார். மேலும் எனது குடும்பத்தினர் அனைவரும் தி.மு.க.வில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழரசியின் தம்பி குரளமுதன் நேற்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறளமுதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குறளமுதனுக்கு கருப்பசாமிபாண்டியன் ஆதரவாளர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கருப்பசாமிபாண்டியன் ஆதரவாளரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony