முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டால்ஃபின் பள்ளி மாணவி ஐரோப்பிய செஸ் போட்டிக்கு தேர்வு

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மே 13 - மதுரை டால்ஃபின் பள்ளி மாணவி மீனுபிரியா ஐரோப்பாவில் நடைபெற உள்ள இண்டர்நேஷனல் குழு சதுரங்கப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். மாணவி மீனுபிரியாவிற்கு பள்ளி தாளாளர் ஏ.ஆர்.ராமனாதன் பாராட்டு தெரிவித்தார். மதுரை பைபாஸ் ரோடு, டால்ஃபின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவி மீனுபிரியா கடந்த மே 1 ம் தேதிமுதல் 10 ம் தேதிவரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 11 சுற்றுக்களில் 8 புள்ளிகளைப் பெற்று 4 ம் இடத்தை வென்றார். இதற்கு ரொக்கப்பரிசாக ரூ. 8000 பெற்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் அகில இந்திய சதுரங்க கழகத்தின் சார்பில் ஐரோப்பாவில் நெதர்லாந்து அல்லது ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள உலக குழு சதுரங்கப் போட்டியில் இந்திய சதுரங்க குழுவின் சார்பில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். 

ஐரோப்பாவில் நடைபெற உள்ள இண்டர்நேஷனல் குழு சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாட தேர்வு பெற்றுள்ள மதுரை நகரின் ஒரே மாணவி மீனுபிரியாவிற்கு டால்ஃபின் பள்ளியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டால்ஃபின் பள்ளி தாளாளர் ஏ.ஆர்.ராமனாதன், வெற்றி பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். மீனு பிரியாவிற்கு பயிற்சியளித்த டால்ஃபின் பள்ளியின் சிறப்பு பயிற்சியாளர் கெளஸ் கமருதீனை டால்ஃபின் பள்ளியின் தலைமை பயிற்சியாளர் எம்.திருநாகலிங்கம் வாழ்த்தி பொன்னாடை போர்த்தினார். டால்ஃபின் பள்ளி முதல்வர் ஏ.பத்மா, மீனுபிரியா உலக சதுரங்கப்போட்டியில் சாதனை புரிந்து வெற்றிகளை குவிக்க வாழ்த்தினார். மேலும் மாணவி  மீனுப்பிரியா ஆசிய சதுரங்கப் போட்டியிலும்  விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு பள்ளி தாளாளரும், ஆசிரியர்களும், மாணவ-மாணவியரும் தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago