முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்தான்புல்,அக்.6 - பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்க பயிற்சி முகாம்களை அழிக்கும் வரை பேச்சுவார்த்தையில் எந்தவித பயனும் ஏற்படாது என்று அந்த நாட்டுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா_பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கிறது. இதற்கு காரணம், பாகிஸ்தானில்தான் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த தீவிரவாத அமைப்புகளுக்கு ஏராளமான ஆயுத பயிற்சி மையங்கள் உள்ளன. மேலும் தீவிரவாதிகளுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் பாகிஸ்தான் வழியாகத்தான் கிடைக்கிறது. பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இதனால்தான் இருநாடுகளிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் எந்தவித பயனும் ஏற்படாமல் இருக்கிறது. 

இந்தநிலையில் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து வெளியாகும் துருக்கி தினசரியான டுடே ஜமான் என்ற பத்திரிகைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பாகிஸ்தான் அரசு தனது நாட்டில் உள்ள தீவிரவாத பயிற்சி மையங்களை அடியோடு அழித்துவிட வேண்டும். அப்போதுதான் இந்தியா_பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படும் என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான் நாடானது தனது நாட்டில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை அழித்துவிடப்படும் என்று அந்த நாடு கடந்த 2004_ம் ஆண்டே உறுதி அளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி இதுவரை காப்பாற்றப்படவில்லை. ஆனால் அந்த உறுதிமொழியை காப்பாற்றப்படும் என்று தற்போது பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் நவாஸ் ஷெரீப் உறுதி அளித்துள்ளார். இது பாராட்டுக்குரியது. இந்த உறுதிமொழியை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு விரைவில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன என்றும் முகர்ஜி தெரிவித்தார். கடந்த 1972_ம் ஆண்டு அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் பாகிஸ்தான் பிரதமராக இருந்து பூட்டோவுக்கும் இடையே சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்த சரத்துப்படி செயல்பட இருநாட்டு பிரதமர்களும் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் முகர்ஜி மேலும் கூறினார். 

தீ

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony