முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீது இஸ்ரேல் தனியாக ராணுவ தாக்குதல் நடத்தும்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம், அக். 6 - ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தாவிட்டால் அதன் மீது தனியாகவே ராணுவ தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். 

அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டின் போது சிரியா ரசாயன ஆயுத ஒழிப்பு, மத்திய ஆசியாவில் உள்ள நாடுகள் அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டன. இந்த மாநாட்டில் இஸ்ரேல், ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால் இதனை ஈரான் மறுத்து வருகிறது. 

மத்திய ஆசியாவில் பதட்டம் தணிக்கப்பட வேண்டுமானால் அணு ஆயுத ஒழிப்புக்கு இஸ்ரேல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஈரான் நாட்டின் புதிய அதிபர் ஹசன் ரபுகானி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை இஸ்ரேல் அனுமதிக்காது. தேவைப்பட்டால் இஸ்ரேல் தனியாகவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். 

இந்நிலையில் நேற்று இஸ்ரேலில் நடத்திய கருத்து கணிப்பில் 65.6 சதவீதம் பேர் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் பெஞ்சமின் கூறுகையில், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன் மீது இஸ்ரேல் தனியாகவே நடவடிக்கை எடுக்கும். அணு ஆயுத தயாரிப்பை பொறுத்தமட்டில் வடகொரியாவை விட ஈரான் ஆபத்தான நாடாகும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த செய்தி ஆசியாவில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago