முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் வன்முறை: யாத்ரீகர்கள் உள்பட 73 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், அக்.7 - ஈராக்கில் நடந்த வன்முறையில்  யாத்ரீகர்கள் உள்பட 73 பேர் உயிரிழந்தனர். ஈராக்கில் அமெரிக்கப் படை வெளியேறிய பின்னர் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி வகித்து வருகிறது.  ஆனால் அங்கு வசித்து வரும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கு இடையே அடிக்கடி மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. 

வடக்கு பாக்தாத்தில் அதாமியா பகுதியில் ஷியா பிரிவினரின் வழிபாட்டுத் தலம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு ஏஏராளமானவர்கள் கூடினர். இதையடுத்து அந்த கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 

இதில் உடல் சிதறி 59 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 75 பேர் காயமடைந்தனர். இதற்கு  சன்னி பிரிவை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் தான் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். 

பாலாத் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மற்றொரு தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 12 பேர்  உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். மொசூல் நகரில் ஷர்சியா என்ற டெலிவிஷன் நிருபர் மொகமது கரீம் அல் பத்ரானி, காமராமேன் மொகமது கானெம் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஈராக்கில் ஒரே நாளில் வன்முறைக்கு  73 பேர் பலியாகியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago