முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்கு மாகாண முதல்வராக விக்னேஷ்வரன் பதவி ஏற்றார்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,அக்.8 - இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக ஜி.விக்னேஷ்வரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மகிந்தா ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இலங்கையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் அங்கு மாகாண தேர்தல்கள் நடைபெற்றன. 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களை தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தமிழக தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இந்த வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வடக்கு மாகாண முதல்வராக ஜி.விக்னேஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார். நேற்று தலைநகர் கொழும்பில் நடந்த விழாவில் இவர் வடக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட இவருக்கு அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் விக்னேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் பகுதியில் இனி வன்முறைக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். மேலும் சிங்கள மொழியும், சிங்கள கலாச்சாரமும் சிங்கள சகோதர, சகோதரிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் நமக்கு முக்கியம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் விக்னேஷ்வர். பதவி ஏற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago