முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சென்றார் குர்ஷித்: மீனவர்கள் குறித்து பேச்சு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு,அக்.8 - இரண்டு நாட்கள் பயணமாக மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று கொழும்பு போய் சேர்ந்தார். அவரை பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் சமூக சேவைத்துறை அமைச்சர் பெலிக்ஸ் பெரேரா மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா ஆகியோர் வரவேற்றனர். 

இலங்கைக்கு இரண்டு நாட்கள் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சென்றுள்ளார். அங்கு சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெற்ற பிறகு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் அங்கு முதன் முறையாக சென்றுள்ளார். இலங்கையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஷ் மற்றும் அதிபர் ராஜபக்சே ஆகியோரை சல்மான் குர்ஷித் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை சிறையில் வாடிக்கொண்டியிருக்கும் தமிழக மீனவர்கள் பற்றியும் வடக்கு மாகாண மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிப்பது பற்றியும் அவர் பேச்சு நடத்தினார். குறிப்பாக தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும் தனது கவலையை அதிபரிடம் வெளியிட்டார் சல்மான் குர்ஷித். தமிழக மீனவர்கள் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும் இன்று யாழ்ப்பாணம் செல்லும் அவர் அங்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனையும் மற்றும் அங்குள்ள தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தனது இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அவர் டெல்லி திருப்புவார் எனத்தெரிகிறது. இந்நிலையில் நேற்று வடக்கு மாகாண முதல்வராக விக்னேஷ்வரன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்