முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கனடா முடிவு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மெல்பர்ன்,அக்.9 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டோம் என்று கனடா அறிவித்துள்ளது. 

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு இனப்படுகொலை நடந்துள்ளது. இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் வசிக்கும் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்தது. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். போரின் போது ஒரு நாளில் 40 ஆயிரம் தமிழர்கள் சிங்கள ராணுவத்தினர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அங்கு பிரதிநிதியை அனுப்பி இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தியது.

இந்தநிலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை தொடர்ந்து நடந்து வருவதோடு மனித உரிமைகளும் மீறப்பட்டு வருவதால் அங்கு நடைபெற்று வரும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் கலந்துகொண்டால் இலங்கைக்கு மேலும் துணிவு ஏற்பட்டு இனப்படுகொலை அதிகரிக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் விளக்கமாக கூறியிருந்தார். 

இந்தநிலையில் கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாது என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின்போதும் போருக்கு பின்னரும் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதோடு இனப்படுகொலையும் நடந்து வருவதால் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாது என்று அந்த நாட்டு பிரதமர் மேலும் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis