முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் - பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ஸ்டாக்ஹோம், அக்.10 - பிரிட்டனை சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ்,பெல்ஜியத்தை சேர்ந்த பிராங்காய் எங்க்லர்ட் ஆகியோர் இயற்பியல் துறையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாமல் 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17_வதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்றுனி 4_ம் ஆண்டு நோபல் பரிசு பெற உள்ள விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் கூறினார். இதனால்தான் ஹிக்ஸ் போஸான் அல்லது கடவுல் துகள் என்று இது அழைக்கப்படுகிறது.

இந்தத் துகள் இன்றி மனிதர்கள் 

உள்பட எவரும் வாழ முடியாது. இந்தத் துகள்களுடன் தொடர்பு இருப்பதால் தான் அனைத்து பொருள்களுக்கும் எடை கிடைக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த துகளுக்கான இயற்பியல்  கோட்பாட்டை பீட்டர் ஹிக்ஸ் பிராங்காய் எங்க் லர்ட் ஆகியோர் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதற்காக நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் உருவாக்கிய இந்த கோட்பாடு ஸ்விட்சர்லாந்தில்  உள்ள சிஇ ஆர்என் பரிசோதனைக் கூடத்தில்  கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது. ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10_ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு 

நோபல் பரிசு வழங்கப்படும்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்