முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் புருனே - இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.10 - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று 4 நாள் பயணமாக புருனே மற்றும் இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். 

இந்த பயணத்தின்போது புருனேயில் நடைபெறும் 11_வது இந்தியா_ஏசியான் மற்றும் 8_வது கிழக்காசியா உச்சி மாநாடு ஆகியவைகளில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர்கள் சென்றுள்ளனர். இந்த இரண்டு உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ளும் தலைவர்களுடனும் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். அப்போது பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், தாராள வர்த்தகம் ஆகியவைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் ஏற்பட உள்ளன. தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையில் இந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பானது தெற்காசியாவில் மட்டுமல்லாது ஆசிய கண்டம் முழுவதும் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் இந்த நாடுகளுடன் தற்போது வர்த்தகமானது சுமார் 60 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இதை வரும் 2015_ம் ஆண்டில் 100 மில்லியன் டாலராகவும் 2022_ம் ஆண்டில் 200 மில்லியன் டாலராகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்