முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநில மக்களுக்கு முதல்வர் கோகாய் நன்றி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,மே.14 - அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்து 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தியதற்காக அந்த மாநில மக்களுக்கு முதல்வர் தரூண் கோகாய் நன்றியை தெரிவித்துள்ளார். 

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமயிலான கூட்டணி அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மகிழச்சியில் முதல்வர் தரூண் கோகாய் நேற்று கவுகாத்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஓட்டுளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். இதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் 3-வது முறையாக ஆட்சி அமைக்கப்போகிறோம். மக்களின் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். அதனால் மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். எங்களுடைய பணியிலும் செயலிலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் பெரும் திருப்தி அடைந்துள்ளனர். எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றிபெறுவதற்கு பெண்கள், இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள்தான் முக்கிய காரணமாகும். இவ்வாறு கோகாய் கூறினார். 

மாநிலத்தில் 3-வது முறையாக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறுவதற்கு ஏதாவது மந்திரத்தை கையாண்டீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதில் அளித்த கோகாய், மந்திரமாவது தந்திரமாவது. மக்களுக்கு நாங்கள் உண்மையாக உழைத்தோம். அதனால் எங்கள் மீது அவர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து ஓட்டளித்துள்ளனர் என்றார். கிரிஷாக் முக்தி சங்ராம் சமிதி போன்ற அமைப்புகள் காங்கிரஸ் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறினாலும் அதை மக்கள் நம்பவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony