முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா-மம்தாவை சேர்த்து 4 பெண் முதல்வர்கள்

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.14 - தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இவற்றில் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும், தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வும், வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி சுமார் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதே போல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 215 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த இடதுசாரிகளுக்கு மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், தமிழகத்தில் ஜெயலலிதாவும் முதல்வராகிறார்கள். 

ஏற்கனவே டெல்லியில் ஷீலாதீட்சித் முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரசை சேர்ந்த இவர் நீண்ட காலமாக முதல்வர் பதவியில் இருந்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த முறை நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று உ.பியில் ஆட்சி அமைத்தார். உத்தர பிரதேச மாநிலம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாயாவதி முதல்வரானார். அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. 

ஆக, இந்தியாவில் ஏற்கனவே 2 பெண் முதல்வர்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் இருவர் முதல்வராகிறார்கள். ஒருவர் தமிழகத்தின் ஜெயலலிதா மற்றொருவர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி. ஆக, இந்தியாவில் மொத்தம் 4 பெண் முதல்வர்கள் ஆட்சி செய்யவிருக்கிறார்கள். 

இது பெண்மைக்கு கிடைத்த பெரும் பேறு என்றே சொல்லலாம். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு காலம் இடது முன்னணி ஆட்சி செய்து வந்தது. அந்த ஆட்சியை வீழ்த்தியவர் மம்தா பானர்ஜி. இதே போல் தமிழகத்தில் ஊழல் ஆட்சி புரிந்து வந்த தி.மு.க.வை அரியணையில் இருந்து அகற்றியிருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. 

இதுவரை தி.மு.க.வினர் பணம் கொடுத்தே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தார்கள். ஆனால் இம்முறை அவர்களது பாட்சா பலிக்கவில்லை. தி.மு.க. வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றி மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரமே. அது மட்டுமல்ல, தி.மு.க.வின் ஊழல் என்றும் சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்