முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யூர் (தனி) அ.தி.மு.க. வேட்பாளர் வி.எஸ்.ராஜி வெற்றி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

கல்பாக்கம், மே.14 - செய்யூர் (தனி) அ.தி.மு.க. வேட்பாளர் வி.எஸ்.ராஜி 26,584 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இது குறித்த விபரம் வருமாறு:- 2011 தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் மே.13-ந் தேதியன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் நடைபெற்றது. இதில் செய்யூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.எஸ்.ராஜியும், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக பாரிவேந்தனும் களத்தில் போட்டியிட்டானர். காஞ்சிபுரம் மாவட்ட செய்யூர் (தனி) தொகுதிக்கான வாக்கு பெட்டிகள்  மதுராந்தகம் எ.செளபாக்மால் செளகார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இங்கு ஏற்கனவே மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் வாக்கு பெட்டிகள் கொண்டுவரப்பட்டு தேர்தல் கட்சி வேட்பாளர்கள், முகவர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையிலும், சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டன.

ஆரம்ப முதலே செய்யூர் தொகுதியின் முடிவுகள் முதல் சுற்றில் இருந்து 15-வது சுற்றுவரை அ.தி.மு.க. வேட்பாளர் வி.எஸ்.ராஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை விட வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையிலும் இருந்து வந்தார்.

15-வது சுற்று முடிவில் 78,307 வாக்குகள் பெற்று விடுதலை சிறுத்தைகல் கட்சி வேட்பாளர் பாரிவேந்தனைவிட 26, 584 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

வி.எஸ்.ராஜி பெற்ற வாக்குகள் 78,307 முதல் இடம், பார்வேந்தன் 51,723 பெற்று இரண்டாவது இடம், ஓ.இ.சங்கர் புரட்சி பாரதம் கட்சி 2322 (ஒரு தபால் ஓட்டு உட்பட) மூன்றாவது இடம் ஆகும்.

செய்யூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,73,864. இதில் பதிவான வாக்குகள் 1,41,871. தபால் ஓட்டு விபரம் மொத்த ஓட்டுக்கள் 164. வி.எஸ்.ராஜி 8, பார்வேந்தன் 21, ஓ.இ.சங்கர் 1, பி.சம்பத் (பி.ஜே.பி) செல்லாதவை 133 தபால் ஓட்டுக்கள் செல்லாமல் போனதற்கு காரணம் அடையாளம் காட்டும் அலுவலரின் கையொப்பம் இல்லாததால் தபால் ஓட்டுக்கள் செல்லாமல் போனதாக கூறப்பட்டது.

செய்யூர் தனி தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளர் ரகுவீர் ஸ்ரீவத்சவ் பார்வையிட்டார். தேர்தல் அதிகாரிகள் குமரேசன், எட்டியப்பன், தாசில்தார் லோகநாதன் ஆகியோர்  பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்