முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல்: பெண் காயம்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், அக். 16 - மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் உள்ள ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பெண் படுகாயமடைந்தார். 

யாங்கூன் நகரை சுற்றி கடந்த 2 நாட்களாக நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர்  இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர். யாங்கூன் நகரில் அசம்பாவிதம் நடந்ததில்லை. யாங்கூனில் உள்ள டிரேடர்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலின் 9 வது மாடியில் குண்டு வெடித்தது. அமெரிக்காவை சேர்ந்த பெண் பலத்த காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக போலீசாரும் பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் ஓட்டலை மூடி சீல் வைத்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் மியான்மரில் நடக்கவுள்ளது. எனவே குண்டுவெடிப்பு சம்பவம் போட்டியை சீர்குலைக்கும் சதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்