முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு வருகிறார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக்.17 - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் 9 நாள் பயணமாக இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி கமிலாவும் வருகிறார். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். சார்லஸ் இந்தியாவுக்கு வருவது 8_வது முறையாகும்.

அடுத்த மாதம் 6_ம் தேதி முதல் 14_ம் தேதி வரைஅவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது சார்லஸ் தம்பதி உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூன், டெல்லி, மும்பை, புனே, கொச்சி ஆகி.ய ஊர்களில்  சுற்றுப்பயணம் செய்கிறார்கள். டேராடூனில்,  ராஜீவ் காந்தி படித்த புகழ்பெற்ற டூன் பள்ளி உள்ளது. கமிலா அங்கு செல்கிறார். பின்ன ர் அவர்கள் இந்திய ராணுவ அகாதெமிக்குச் செல்கிறார்கள். 

மும்பையில் பாலிவுட் பிரபலங்களுடன் விருந்தில் பங்கேற்கிறார்கள். கொச்சியில் யானை வழித்தடத்துக்கும் சார்லஸ் செல்கிறார். முதல் உலகப் போர் முடிவடைந்ததைக் குறிக்கும் ஞாபகார்த்த ஞாயிறு தினத்தையும் அவர்கள் அனுசரிக்கிறார்கள். இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, முக்கிய அரசியல் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் கலாசார பிரபலங்களையம் அவர்கள் சந்தித்துப் பேசுவார்கள். 

கல்வி, வர்த்தக தொடர்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற துறைகளில் இந்திய_ இங்கிலாந்து நட்புறவைப் பலப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் பங்கேற்கிறார்கள் என்று லண்டனில் உள்ள சார்லஸின்  அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்கிறார் சார்லஸ். அங்கு நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்வார். இங்கிலாந்து ராணியும், சார்லஸின் தாயாருமான இரண்டாம் எலிசபெத் முதுமை காரணமாக இந்த மாநாட்டில்  பங்கேற்க இயலவில்லை. எனவே அவர் சார்பில் சார்லஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்